← முகப்பு செய்திகள்

IPL 2026- Top 5 Bowlers Who Performed Well in this IPL season-

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 34 பார்வைகள்
IPL 2026- Top 5 Bowlers Who Performed Well in this IPL season-

டி20 கிரிக்கெட் போட்டி என்றாலே பவர்புல் பேட்டர்களும், அசுர வேக ரன் குவிப்புகளும் தான் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு இன்னிங்ஸின் போக்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்னவோ சுழற்பந்து வீச்சாளர்கள் தான். ஐபிஎல் 2026 தொடரில் 66 லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே-ஆஃப் சுற்றுகள் நெருங்கி வரும் வேளையில், மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் 200 பிளஸ் ரன்கள் எடுப்பது சாதாரணமாகிவிட்ட நிலையிலும், ஒரு சில ஸ்பின்னர்கள் ரன் வேகத்தை கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தி மேட்ச் வின்னர்களாக திகழ்ந்துள்ளனர். நடப்பு சீசனின் பர்பிள் கேப் (Purple Cap) பந்தயத்தில் முன்னிலையில் இருக்கும், லீக் சுற்றை ஆதிக்கம் செலுத்திய 5 சிறந்த ஸ்பின்னர்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

1. ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்)

போட்டிகள்: 14 | விக்கெட்டுகள்: 19 | ஓவர்கள்:47.5 | எகனாமி: 8.72

பர்பிள் கேப் பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் இருக்கும் ரஷீத் கான், டி20 லெக்-ஸ்பின்னில் எப்போதும் தான் தான் கிங் என்பதை நிரூபித்துள்ளார். பேட்டர்கள் இவரை அட்டாக் செய்ய நினைத்தாலும், முக்கியமான நேரங்களில் விக்கெட் எடுத்து குஜராத் அணிக்கு பிரேக்-த்ரூ கொடுத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான சாதனையா? ஆர்சிபி அணியின் ஸ்டார் பவுலர் சோகம்

இவரது 8.72 எகனாமி ரேட் சற்று அதிகமாக தெரிந்தாலும், நவீன கால டி20 கிரிக்கெட்டில் பேட்டர்களின் அதிரடி ஆட்டத்திற்கு மத்தியில் இது சிறப்பான செயல்பாடு தான். கூக்ளி மற்றும் வேக மாறுபாடுகள் மூலம் எதிரணியை திணறடித்து வருகிறார்.

2. சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

போட்டிகள்: 12 | விக்கெட்டுகள்: 14 | ஓவர்கள்:47.0 | எகனாமி:6.40

ரஷீத் கான் விக்கெட்டுகளை வேட்டையாடினால், சுனில் நரைன் ரன்களை அப்படியே 'லாக்' செய்து விடுகிறார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 9-10 ரன்கள் கொடுக்கும் போது, நரைனின் எகனாமி ரேட் வெறும் 6.40 மட்டுமே! கொல்கத்தா அணியின் முக்கிய ஆயுதமாக இருக்கும் இவரது பந்துகளை கணிக்க முடியாமல் பேட்டர்கள் திணறி வருகின்றனர். விக்கெட் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்தாலும், மிடில் ஓவர்களில் எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதில் இவர் தான் நம்பர் 1.

3. அல்லா முகமது கஜன்ஃபர் (மும்பை இந்தியன்ஸ்)

போட்டிகள்:10 | விக்கெட்டுகள்: 14 | ஓவர்கள்: 35.5 | எகனாமி:9.60

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் மோசமாக அமைந்தாலும், 19 வயதான ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் கஜன்ஃபரின் எழுச்சி அந்த அணிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும். 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சீசனின் 'பிரேக்அவுட் ஸ்டாராக' வலம் வருகிறார். ரன்களை வாரி வழங்கினாலும், பயமே இல்லாமல் பந்தை தூக்கி வீசி விக்கெட்டுகளை எடுப்பதில் குறியாக இருக்கிறார். மும்பை அணியின் எதிர்கால தூணாக இவர் பார்க்கப்படுகிறார்.

4. நூர் அகமது (சென்னை சூப்பர் கிங்ஸ்)

போட்டிகள்:14 | விக்கெட்டுகள்:13 | ஓவர்கள்: 51.0 | எகனாமி: 8.39

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தடுமாறினாலும், நூர் அகமது தனது இடது கை ரிஸ்ட்-ஸ்பின் மூலம் சிஎஸ்கே-வின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். இந்த பட்டியலில் உள்ள மற்ற ஸ்பின்னர்களை விட நூர் அகமது தான் அதிக ஓவர்கள் வீசியுள்ளார். தோனிக்கு பிந்தைய காலகட்டத்தில், சென்னை அணியின் ஸ்பின் கூட்டணியை வழிநடத்தும் தகுதி தனக்கு இருப்பதை இந்த 21 வயது இளம் வீரர் நிரூபித்துள்ளார்.

IPL 2026: சன்ரைசர்ஸ் அணி வரலாற்று சாதனை.. மும்பை, சிஎஸ்கே கூட இப்படி செய்தது இல்லை

5. வருண் சக்கரவர்த்தி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

போட்டிகள்:10 | விக்கெட்டுகள்:10 | ஓவர்கள்:37.0 | எகனாமி:8.78

சுனில் நரைன் ஒருபுறம் நெருக்கடி கொடுக்க, மறுபுறம் தமிழகத்தை சேர்ந்த மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவரது பந்துவீச்சு, நரைன் ஏற்படுத்திய அழுத்தத்தை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த உதவுகிறது. இவர்களின் கூட்டணி தான் ஐபிஎல் 2026-ன் சிறந்த மிடில் ஓவர் ஸ்பின் பார்ட்னர்ஷிப் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net