← முகப்பு செய்திகள்

IPL 2026: RCB Strengthen Top Spot with 23-Run Victory over Punjab; Venkatesh

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 38 பார்வைகள்
IPL 2026: RCB Strengthen Top Spot with 23-Run Victory over Punjab; Venkatesh

தரம்சாலா: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது. கோலி 37 பந்துகளில் 58 ரன்களும், படிக்கல் 25 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

IPL 2026 RCB Strengthen Top Spot with 23-Run Victory over Punjab Venkatesh Iyer and Kohli Shine

நடுவரிசையில் களம் புகுந்த வெங்கடேஷ் ஐயர் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். 40 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி நேரத்தில் டிம் டேவிட் 12 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே பிரியான்ஷ் ஆர்யா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் வெளியேறினர். 19 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி நிலைகுலைந்தது.

நடுவரிசையில் கூப்பர் கானொலி 37 ரன்களும், சூர்யான்ஷ் ஷெட்கே 35 ரன்களும் எடுத்து ஓரளவுக்கு நம்பிக்கையளித்தனர். அதிரடி ஆட்டக்காரர் சஷாங்க் சிங் 27 பந்துகளில் 56 ரன்கள் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசி வெற்றிக்குக் கடுமையாகப் போராடினார். அவருக்கு ஈடுகொடுத்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 37 ரன்கள் எடுத்தார். இருப்பினும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை அவர்களால் முழுமையாக கணித்து ரன் குவிக்க முடியவில்லை.

IPL 2026: 18 ஆண்டுகால ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்த கூப்பர் கோனோலி.. புதிய சாதனை!

பெங்களூரு தரப்பில் இம்பாக்ட் பிளேயராக வந்த ரசிக் சலாம் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது 9-வது வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்டநாயகனாக வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பு மேலும் சிக்கலாகியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net