← முகப்பு செய்திகள்

IPL 2026 playoffs are set as Royal Challengers Bengaluru and Gujarat Titans

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
IPL 2026 playoffs are set as Royal Challengers Bengaluru and Gujarat Titans

மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள முதல் 2 அணிகள் எவை என்பது உறுதியாகியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள், மே 26-ம் தேதி நடைபெற உள்ள முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் நேருக்கு நேர் மோத உள்ளன. இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள அழகான மலைப்பகுதி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகள் தலா 18 புள்ளிகளுடன் பிளே-ஆப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிட்டன. ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி முதலிடத்திலும், குஜராத் அணி 2-வது இடத்திலும் உள்ளன. இதனால் இவ்விரு அணிகளும் முதலாவது தகுதிச் சுற்றில் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல மற்றொரு வாய்ப்பு (தகுதிச் சுற்று 2) வழங்கப்படும்.

IPL 2026 Playoffs RCB to Face GT in Qualifier 1 Race for Final Spot Intensifies

கடைசி 4-வது இடத்தைப் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையப்போகும் அந்த ஒரு அணி எது என்பதில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால், எந்தவித சிக்கலும் இன்றி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ராஜஸ்தான் தோற்றால், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு நூலிழையில் வாய்ப்பு கிடைக்கும்.

புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் 4-வது இடத்தைப் பிடிக்கும் அணி (பெரும்பாலும் ராஜஸ்தான்) மே 27-ம் தேதி சண்டிகரில் நடைபெறும் 'எலிமினேட்டர்' போட்டியில் மோதும். இதில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் மே 29-ம் தேதி மோதுவார்கள்.

2026 ஐபிஎல் தொடரின் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி, மே 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் அந்த அணியே மீண்டும் கோப்பை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

IPL 2026: க்ருணால் பாண்டியா செய்த செயல்.. மிரண்டு போன காவ்யா மாறன்.. பரவும் ‘ரியாக்‌ஷன்’ வீடியோ

பிளே ஆஃப் போட்டிகளின் விபரம்:

மே 26: முதலாவது தகுதிச் சுற்று (பெங்களூரு vs குஜராத்) – தர்மசாலா
மே 27: எலிமினேட்டர் போட்டி (ஹைதராபாத் vs 4-வது அணி) – சண்டிகர்
மே 29: இரண்டாவது தகுதிச் சுற்று – சண்டிகர்
மே 31: இறுதிப் போட்டி – அகமதாபாத்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net