← முகப்பு செய்திகள்

IND vs AFG Test, ODI Series: Complete Schedule, Team Squads, Venue Details

🕐 04 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
IND vs AFG Test, ODI Series: Complete Schedule, Team Squads, Venue Details

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தனது 2026-27 கிரிக்கெட் சீசனின் முதல் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளன. இந்த இரு தொடர்களின் போட்டி அட்டவணை, இரு அணி வீரர்கள் பட்டியல் மற்றும் ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பு விவரங்களை காணலாம்.

முதலாவதாக நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10 வரை முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான வரலாற்றின் முதலாவது இருதரப்பு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

IND vs AFG Test ODI Series Complete Schedule Team Squads Venue Details and Live Streaming Guide

ஆப்கானிஸ்தான் அணியை ஹஷ்மத்துல்லா ஷாகிதி வழிநடத்துகிறார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வளிக்கப்பட்டு, ஒருநாள் தொடரில் மட்டும் விளையாட உள்ளார். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துகிறார். ஒருநாள் அணியில் இருந்து விராட் கோலி காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

ஒரே ஒரு டெஸ்ட்: ஜூன் 6 – 10, முல்லன்பூர் மைதானம், காலை 9:30 மணி.
1-வது ஒருநாள் போட்டி: ஜூன் 13, தர்மசாலா மைதானம், மதியம் 1:30 மணி.
2-வது ஒருநாள் போட்டி: ஜூன் 17, லக்னோ மைதானம், மதியம் 1:30 மணி.
3-வது ஒருநாள் போட்டி: ஜூன் 20, சென்னை சேப்பாக்கம் மைதானம், மதியம் 1:30 மணி.

இந்திய டெஸ்ட் அணி: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.

இந்திய ஒருநாள் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.

வைபவ் சூர்யவன்ஷி தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் பிசிசிஐ கூட்டம்.. ஜூன் 6இல் முக்கிய அணித் தேர்வு

நேரடி ஒளிபரப்பு விவரங்கள்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாகக் காணலாம். மேலும், மொபைல் மற்றும் இணையதளத்தில் ஆன்லைனில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளம் வழியாக நேரலையில் போட்டிகளைக் கண்டுகளிக்கலாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net