நடிகர் விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இன்னும் திரைக்கு வராத 'ஜனநாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள் மற்றும் முழுப் படமும் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இணையத்தில் படத்தை கசிய விட்ட விவகாரத்தில் கைதான முக்கிய நபர்கள் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐடி ஊழியரான மேலும் ஒருவரை மாநில சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.இதுவரை இந்த வழக்கில் 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.