← முகப்பு தலையங்கம்

விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண

🕐 04 Jun 2026 📂 தலையங்கம் 6 பார்வைகள்
விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண

விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.

நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோ மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இன்று (04) காலை 6:45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், இதில் ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

வீதியின் எதிரே பயணித்த இ.போ.ச பஸ் செல்வதற்கு ஏதுவாக ஓட்டோ மரத்திற்கு அருகாமையில் வேகம் குறைக்கப்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓட்டோவின் பின் ஆசனப் பக்கமே மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் ஓட்டோ சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.

நெடுங்காலமாக மக்கிப்போயிருந்த அந்த யூக்கலிப்டஸ் மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பலமுறை அறிவித்தும், அதற்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாததாலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளதாகப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விபத்துத் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான ந
04 Jun 2026
தலையங்கம்
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
04 Jun 2026
தலையங்கம்
விபத்து நிகழ்ந்த நேரத்தில் சிறுமி, ஓட்டோவின் பின்புற ஆசனத்தில் பயணித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
04 Jun 2026
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 Jun 2026
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
45 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
51 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net