← முகப்பு செய்திகள்

புலத்சிங்கல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 10 பார்வைகள்
புலத்சிங்கல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5
புலத்சிங்கல பிரதேச சபை விவகாரம்: தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை நீக்க SJB தீர்மானம்

புலத்சிங்கல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை அவர்களது பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் அந்தப் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தி குழுவின் தலைவர் நிஹால் மெண்டிஸ், மொஹமட் நிஷார்ட், காந்தி பெலவத்த, அயேஷா சாமலி மற்றும் புஷ்பா சமரசிங்க ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்காக கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டுக்கமை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆதாரத்தை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சமர்ப்பித்ததை அடுத்து, இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் பின்னர் கட்சியின் செயற்குழு கூடி, இந்த உறுப்பினர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது.

இது குறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவித்த களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான குறிப்படுகையில், குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் 5பேரும் தொடர்ந்து கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முறைப்பாடு செய்து வந்தேன்.

புலத்சிங்கல பிரதேச சபையில் கூட்டு எதிர்க்கட்சியாக எங்களுக்கு 16 உறுப்பினர்கள் இருந்தனர். சுயேச்சைக் குழு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்களது 6 பேருடன் சேர்த்து எங்களிடம் 16 பேர் இருந்தனர். தேசிய மக்கள் சக்திக்கு 9 பேரே இருந்தனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்காக குறித்த உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி இருக்கலாம். இவ்வாறான சம்பவம் இடம்பெறலாம் என நான் தொடர்ந்து தெரிவித்து வந்தேன்.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு பிரபல பௌத்த பிக்கு மூலம் பெற்றுக்கொண்ட குரல் பதிவு ஒன்றை கட்சி தலைவரிடமும், பொதுச் செயலாளரிடமும் சமர்ப்பித்த பின்னரே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் இது செயற்குழுவிற்கும், சட்டத்தரணிகள் குழுவிற்கும் அனுப்பப்பட்டது, நானும் இதில் தலையிட்டேன். அதன்படி ஐந்து பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். கடந்த மாதக் கூட்டத்திலும் கூட, தேசிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட அனைத்து பிரேரணைகளுக்கும் இவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஒருபோதும் எதிர்க்கவில்லை. எமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே இவர்கள் செயற்பட்டனர். தற்போது அவர்களுக்கு நல்லதொரு தண்டனை கிடைத்துள்ளது. தற்போது வெற்றிடமாகி இருக்கும் இடத்துக்கு அடுத்ததாக பட்டியலில் உள்ளவர்களை சட்டப்பூர்வமான முறையில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net