← முகப்பு செய்திகள்

French Open 2026: Poland's Maja Chwalinska became the first qualifier in French

🕐 05 Jun 2026 📂 செய்திகள் 10 பார்வைகள்
French Open 2026: Poland's Maja Chwalinska became the first qualifier in French

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் 2026 டென்னிஸ் தொடரில், தகுதிச் சுற்று மூலம் நுழைந்த போலந்து வீராங்கனை மஜா ஸ்வாலின்ஸ்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். டென்னிஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், அவர் ரஷ்யாவின் டயானா ஷ்னைடரை 7-6(4), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது. இந்தப் போட்டியின் முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் கடுமையாகப் போராடினர்.

French Open Maja Chwalinska Creates History at French Open 2026 by Reaching Women s Singles Final

ஆட்டம் 4-4 எனச் சமநிலை வகித்தபோது, 10 நிமிடங்கள் நீடித்த ஒரு கேமில் மஜா ஸ்வாலின்ஸ்கா பல பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளைத் தடுத்து தன் சர்வீஸை தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற டை-பிரேக்கரில் 1-3 எனப் பின்தங்கியிருந்த ஸ்வாலின்ஸ்கா, அடுத்த 7 புள்ளிகளில் 6 புள்ளிகளை வென்று முதல் செட்டை 7-6(4) எனக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் தனது சர்வீஸை இழந்த ஸ்வாலின்ஸ்கா, உடனடியாக டயானாவின் சர்வீஸை முறியடித்து பதிலடி கொடுத்தார். டயானா ஷ்னைடர் உடல்நலக்குறைவால் மருத்துவ உதவி பெற்ற நிலையிலும், தனது கவனத்தை சிதறவிடாமல் விளையாடிய ஸ்வாலின்ஸ்கா, 5-4 என இருந்தபோது டயானாவின் சர்வீஸை முறித்து செட்டை 6-4 எனக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார்.

உலகத் தரவரிசையில் 114-வது இடத்தில் இருந்த ஸ்வாலின்ஸ்கா, இந்தத் தொடரில் தகுதிச் சுற்று உட்பட தொடர்ந்து 9 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளார். இதற்கு முன்பு முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் வீராங்கனைகளை ஒருமுறை கூட வென்றிராத அவர், இந்தத் தொடரில் தொடர்ந்து 4 முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் தரவரிசையில் முதல் 21 இடங்களுக்குள் நுழைய உள்ளார். மேலும், இந்தத் தொடருக்கு முன்பு வரை 8,64,030 டாலர்கள் மட்டுமே சம்பாதித்திருந்த அவர், தற்போது இந்தத் தொடரின் மூலம் மட்டுமே 1,624,000 டாலர்களைப் பரிசாகப் பெற்றுள்ளார்.

ஆர்சிபி அணியில் ஹர்திக் பாண்டியா? ஐபிஎல் முடிந்த மறுநாளே தினேஷ் கார்த்திக்குடன் ரகசிய சந்திப்பு!

நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் அவர் மிரா ஆண்ட்ரீவாவை எதிர்கொள்கிறார். ஓபன் எராவில் தகுதிச் சுற்று மூலம் கிராண்ட்ஸ்லாம் வென்ற ஒரே வீராங்கனையான எம்மா ரடுகானுவின் சாதனையை ஸ்வாலின்ஸ்கா சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net