← முகப்பு செய்திகள்

கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏ

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 6 பார்வைகள்
கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏ
பைரவி நுண்கலைக் கூடம் நடத்திய தமிழர் சேனைக்கு வயது 50′ ‘ ஒலிப்பேழையின் முதற் பிரதியை அனைத்துலக தமிழர் பேரவை தலைவர் நிமால் விநாயகமூர்த்தி ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் ஆசிரியர் ரவியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏற்பாடு செய்து உணர்வுபூர்வமாக நடத்துவதிலும் அத்துடன் ‘ஆரோசை’ என்னும் இசைக்குழுவையும் ஆரம்பித்து அதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் வாத்திய மேடையமைத்துக் கொடுக்கும் ‘பைரவி நுண்கலைக் கூடம்’ கடந்த வாரம் இரண்டு ;தமிழர் விழாக்களை’ நடத்தினர்

அவர்கள் நடத்திய இரண்டு தமிழுணர்வு தழுவிய விழாக்களாக மறைந்த தேசிய உணர்வுப் பாடகர் தேனிசை செல்ல்பபா அவர்கள் நினைவு விழாவை ‘தேசம் தழுவிய தேனிசை’என்ற பெயரிலும் எமது புனித இயக்கமாம் விடுதலை புலிகள் இயக்கத்தின் 50வது ஆண்ட நிறைவைக் கொண்டாடும் ;தமிழர் சேனைக்கு வயது 50’ என்ற பொன்விழாவும் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றன.

திருமதி கோதை அமுதன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இந்த உணர்வு மிக்க விழாக்களை தொகுத்து வழங்கினர். அத்துடன் சிறப்புரைகளையும் ஆற்றினர்.

‘பைரவி நுண்கலைக் கூடத்தின் அதிபர் ஜெயச்சந்திரன் தியாகராஜா அவர்கள் மற்றும் அவரது துணைவியார் – பிள்ளைகள் மற்றும் ஏனைய பெற்றோர்கள் -இசைக் கலைஞர்கள் என பலர் இணைந்து இந்த அற்புதமான இரண்டு விழாக்கனை ஒரே கூரையின் கீழ் நடத்தினர்.

அன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தியாகம் மற்றும் வெற்றிகள் மற்றும் ஒழுக்கம் கண்ணியம் ஆகியன குறித்தும் தலைவர் பிரபாகரன் குறித்து வரிகள் அடங்கிய ஒன்பது பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழை ஒன்றும் வெளியிடப்பெற்றது. அதில் உள்ள பாடல்களில் கனடா வாழ் கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா-அகணி சுரேஷ் -நா. லோகேந்திரலிங்கம் ஆகியோர் தலா ஒரு பாடலையும் எஞ்சிய 6 பாடல்களையும் தாயகத்தைச் சேர்ந்த கவிஞர் சகுந்தலன் அவர்களும் எழுதியிருந்தார்கள். பாடல்களை அனைத்தையும் கனடாவாழ் சிரேஸ்ட பாடக பாடகிகளும் இளைய தலைமுறை பாடக பாடகிகளும் குரல் கொடுத்திருந்தார்கள்.

இந்த ஒலிப்பேழையின் முதற் பிரதியை அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி திரு ரவி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

தமிழர் சேனையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பைரவி நுண்கலைக்கூடம் வெளியிட்ட ‘தமிழர் சேனைக்கு வயது – 50’ என்ற இசைத்தட்டின் வெளியீட்டு விழாவில் ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் ஆசிரியராக முன்னர் விளங்கிய ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நூலில் இடம்பெற்ற பாடல்களை எழுதிய கவிஞர்களையும், ஆய்வுரைகளை வழங்கிய அறிஞர்களையும் கௌரவித்து கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுடனான தனது பயணம் மற்றும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net