சென்னை: ஐபிஎல் 2026 சீசனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சிஎஸ்கே போட்டியின் முன், தோனியின் எதிர்காலம் குறித்து மறைமுகப் பதிவு ஒன்றை அஸ்வின் பகிர்ந்தார்.சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, CSK-வின் இந்த சீசனின் கடைசி ஹோம் கேம் ஆகும். தோனி பயிற்சியில் ஈடுபட்ட போதும், அவர் இன்று களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, அஸ்வின் தனது எக்ஸ் பதிவில், இன்று தோனி களமிறங்க மாட்டார். 2027 சீசனில் வேண்டுமானால் நடக்கலாம் என்றார். பேட்டிங் மாற்றங்கள் நிகழாது; அக்யல் ஹுசைன் அணிக்குள் வருவாரா என்றும் கேள்வி எழுப்பினார். அவரது ட்வீட்: "இன்று நடக்காது! 2027 இல்? ஒருவேளை. பேட்டிங் மாற்றங்கள் நடக்கும் என்று நினைக்கவில்லை. அக்யல் ஹுசைன் உள்ளே வருவாரா? #CSKVSRH,".

ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன், எம்.எஸ். தோனி ₹4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். எனினும், காயம் காரணமாக இந்த சீசனில் அவர் சென்னை அணிக்காக இதுவரை ஒரு ஆட்டத்திலும் களமிறங்கவில்லை. அவரது உடல்நிலை குறித்தான இந்த தகவல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
IPL 2026: தோனிக்கு இன்றைய ஆட்டம் கடைசியாக இருக்க கூடாது..சேவாக் தந்த யோசனை
SRH உடனான போட்டி CSK-வின் பிளேஆஃப் வாய்ப்புகளுக்கு மிக முக்கியமானது. 12 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் (+0.027 நிகர ரன் ரேட்)-உடன் ஐந்தாவது இடத்தில் உள்ள சென்னை அணி, மீதமுள்ள இரண்டில் வென்றால் 16 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களுக்குள் வரும். தோற்றால் 14 புள்ளிகள் மட்டுமே; இதனால் பிளேஆஃப்க்கு மற்ற அணிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டும்.
IPL 2026: நீங்க வந்தால் மட்டும் போதும்! ரசிகர்களுக்காக இதை செய்யுங்க என அஸ்வின் கருத்து
கடந்த நான்கு ஆட்டங்களில் மூன்றில் வென்று நல்ல நிலையில் உள்ள CSK, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான சமீபத்திய தோல்விக்குப் பின் சொந்த மண்ணில் SRH-க்கு எதிராக வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்புடன் உள்ளது.