← முகப்பு செய்திகள்

CSK suffered their worst-ever IPL defeat, losing by 89 runs to Gujarat

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 25 பார்வைகள்
CSK suffered their worst-ever IPL defeat, losing by 89 runs to Gujarat

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே ரன்கள் அடிப்படையில் சிஎஸ்கே அணி சந்தித்துள்ள மிகப்பெரிய தோல்வியாகும். இந்த படுதோல்வியின் மூலம் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி ஐபிஎல் 2026 தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 37 பந்துகளில் 64 ரன்களும், தமிழக வீரர் சாய் சுதர்சன் 53 பந்துகளில் 84 ரன்களும் விளாசி அஸ்திவாரம் அமைத்தனர். இறுதியில் ஜோஸ் பட்லர் தனது அதிரடியால் 27 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.

CSK faced Biggest Defeat in IPL History Gujarat Titans Crush Chennai by 89 Runs to Knock Them Out

230 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கைவிரல் காயத்துடன் விளையாடிய சஞ்சு சாம்சன் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். முகமது சிராஜின் அனல் பறக்கும் பந்துவீச்சில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். சிவம் துபே மட்டும் தனி ஆளாகப் போராடி 17 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். இறுதியில் 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு சிஎஸ்கே அணி சுருண்டது.

இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே சிஎஸ்கே அணியின் மோசமான சாதனையாக இருந்தது. தற்போது 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று புதிய சரிவைச் சந்தித்துள்ளது. காயங்கள் மற்றும் வீரர்களின் ஒருங்கிணைப்பு இல்லாத ஆட்டத்தால் சிஎஸ்கே அணி இந்த சீசனில் பிளே-ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

89 ரன்கள் – குஜராத் டைட்டன்ஸ் (2026)
60 ரன்கள் – மும்பை இந்தியன்ஸ் (2013)
54 ரன்கள் – பஞ்சாப் கிங்ஸ் (2022)
50 ரன்கள் – பெங்களூரு (2025)
46 ரன்கள் – மும்பை இந்தியன்ஸ் (2019)

GT vs CSK: சாய் சுதர்சன் மெகா சாதனை.. சேவாக்கின் 14 ஆண்டுகால சாதனையைச் சமன் செய்து சரித்திரம்

5 முறை ஐபிஎல் சாம்பியனான சிஎஸ்கே அணி, லீக் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களிடையே பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் அபாரமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் அந்த அணியைப் புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net