← முகப்பு செய்திகள்

BCCI Not A Public Authority Under RTI: CIC Rules In IndiaBCCI RTI-ன்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 58 பார்வைகள்
BCCI Not A Public Authority Under RTI: CIC Rules In IndiaBCCI RTI-ன்

பிசிசிஐ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக மத்டிதய அரசு ஒரு விளக்கத்தை தந்துள்ளது. மத்திய தகவல் ஆணையம் (CIC), தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் கீழ் பிசிசிஐ வராது என்றும், அது ஒரு பொது நிறுவனம் அல்ல என்று "தீர்ப்பளித்துள்ளது. தகவல் ஆணையர் பி.ஆர். ரமேஷ் வழங்கிய இந்த முடிவு, உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ இனி ஆர்டிஐ மூலம் வராது. இதன் மூலம் பிசிசிஐ செயல் அனைத்தும் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியாது.

இந்த உத்தரவு, 2018-இல் அப்போதைய தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு பிசிசிஐ-யை பொது நிறுவனம் என அறிவித்து, ஆர்டிஐ அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டதிலிருந்து நீடித்து வந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருகிறது. பிசிசிஐ இதை சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்த நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வழக்கு CIC-க்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டது.

புதிய தீர்ப்பில், பிசிசிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h) இன் சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று ஆணையம் திட்டவட்டமாகக் கூறியது. பிசிசிஐ, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கம் என்றும், அரசியலமைப்பாலோ அல்லது நாடாளுமன்ற சட்டத்தாலோ உருவாக்கப்படவில்லை என்றும் இந்த உத்தரவு மேலும் தெளிவுபடுத்தியது.

IPL 2026: டெல்லி வெற்றியால் சிஎஸ்கேக்கு அடிச்ச லக்.. 5வது இடத்திற்கு முன்னேற்றம்.. 12 புள்ளிகளுடன் 3 அணி

பிசிசிஐ-க்கு விலக்கு அளிக்கப்பட, அதன் தன்னாட்சி மற்றும் நிதி கட்டமைப்பே முக்கியக் காரணங்கள் என ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது. இதன் மூலம் பிசிசிஐ நிர்வாகம் மீது அரசு கட்டுப்படுத்த முடியாது. மேலும், இது ஊடக உரிமைகள், ஸ்பான்சர்ஷிப்கள், டிக்கெட் விற்பனை மூலம் வருவாய் ஈட்டி, நிதி ரீதியாக அமைப்பாக செயல்படுகிறது.

உச்ச நீதிமன்றம், குறிப்பாக கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பீகார் வழக்கில், கிரிக்கெட்டில் வெளிப்படைத்தன்மைக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தாலும், பிசிசிஐ-யை ஒரு பொது அதிகார அமைப்பாக அறிவிப்பதில் அது ஒருபோதும் தீர்மானிக்கவில்லை என்பதையும் ஆணையம் தெளிவுபடுத்தியது. இந்த முந்தைய நிலைப்பாடும் பிசிசிஐ வாதத்திற்கு வலு சேர்த்தது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே CIC-ஐ இந்த வழக்கு எட்டியது. கோரப்பட்ட தகவல்கள் தங்களிடம் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கொள்காட்டி, பிசிசிஐ தன்னாட்சி பெற்ற தனியார் அமைப்பாக இருப்பதை CIC உறுதிப்படுத்தியுள்ளது.

IPL 2026: தோனிக்கு இன்றைய ஆட்டம் கடைசியாக இருக்க கூடாது..சேவாக் தந்த யோசனை

தற்போதைய தீர்ப்பு, பிசிசிஐ-யை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட சட்டத் திருத்தம் அல்லது நிர்வாக உத்தரவு தேவைப்படும் என்று சுட்டிக்காட்டுகிறது.இதன் மூலம் இனி ஆர்டிஐ வழியாக பிசிசிஐ இயங்கும் முறையை தெரிந்துகொள்ள முடியாது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net