நாட்டில் அதிகரிக்கும் போதை பாவனை – மேலும் புதிதாக 230 புனர்வாழ்வு நிலையங்கள்

by admin

நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மேலும் 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நச்சுத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு போதை மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 3,63,438 போதை மாத்திரைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்