டண்டணக்கா தொல்லைகாட்சி தொல்லை ?

by admin

ஜனாதிபதி தேர்தல் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பலரும் தமது நலன்களை பேண முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் பிரதான அலுவலகத்தை கொண்ட உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர் ஒருவர் சிவில் சமூகம் என ஒரு அமைப்பை பிரகடனப்படுத்தி பொதுவேட்பாளர் தொடர்பில் முன்னெடுத்துவரும் நிகழ்வுகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மற்றும் அவரது சகபாடியான முன்னாள் தேசிய புலனாய்வு பணிப்பாளர் ஹெந்தவிதாரண ஆகியோரது கூட்டு முதலீட்டிலேயே சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி இயங்கிவருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பிலான கூட்டங்களில் , ஜனாதிபதித் தேர்தலில் தன்னால் 100 கோடி ரூபா வருமானம் பெறமுடியும் அதை விடுத்து பொது வேட்பாளர் விடயத்தில் அக்கறையுடன் இருப்பதாக பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

தோலைக்காட்சி உரிமையாளரே சிவில் சமூகம் என ஒரு அமைப்பை உருவாக்கி, பொதுவேட்பாளர் விடயத்தில் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளதுடன் பின்னணி தொடர்பிலும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே தொலைக்காட்சி உரிமையாளரை பொது வேட்பாளர் விடயத்திலிருந்து ஒதுங்குமாறு  அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

ஏற்கனவே இரு சிங்கள கட்சிகளை கொள்வனவு செய்து வைத்துள்ளதாக தமிழ் புலம் பெயர் வர்த்தகர் ஒருவர் பேரம் பேசி வருகையில் தற்போது கோத்தபாய பினாமி தொலைக்காட்சி சர்ச்சைகள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்