அதானி செய்யும் செலவு என்ன?

by admin

இந்தியாவின் அதானி நிறுவனம்  மன்னாரில் 484 மெகாவாட் காற்றாலையை நிர்மாணித்து வருகிறது. இந்த காற்றாலை வருடாந்தம்  1,611,019,200 kWh  மின்சாரத்தை  உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது .

இவ்வாறு அதானி உற்பத்தி செய்யும்  மின்சாரத்தை ஒரு kWh மின்சாரம்$0.0826 என்கிற அடிப்படையில் பெற்று கொள்ளும் ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டு உள்ளது .

அந்த வகையில் அதானியின் மின்சாரதிற்காக அரசாங்கம் 133,062,065.12 அமெரிக்க டொலர் ஆண்டு தோறும் செலவு செய்ய வேண்டும் .சந்தையில் kWh  மின்சாரம் $ 0.06 ஆக உள்ள நிலையில்  kWh  மின்சாரத்தை  $0.0826 க்கு அதானியிடம் இருந்து  எந்த கேள்வி பத்திர  நடைமுறைகளை பேணாமல் வாங்க ஒப்பந்தம் எழுதப்பட்டதன் மூலம் அரசாங்கம் $33.69 மில்லியன் இழப்பை  ஆண்டு தோறும் சந்திக்க இருக்கின்றது 

அதே போன்று மன்னாரின் சமூக,பொருளாதார சுற்றுச் சூழல் போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்படாத காரணத்தினால் மன்னார் மக்கள் வாழ்விடங்களை-வாழ்வாதாரங்களை  இழக்க இருக்கின்றார்கள் 

ஆனால் இந்த காற்றாலைகளை உருவாக்க அதானி வெறும்  442 மில்லியன் அமெரிக்க டொலர்களை  மட்டுமே முதலீடு செய்து 6,784 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்க இருக்கின்றார் 

அதாவது அதானி தான் முதலீடு செய்த தொகையை விட 15 மடங்கு எதிர்வரும் 20 ஆண்டுகளில் சம்பாதிக்க இருக்கின்றார்

இங்கே முதலீட்டு திட்டங்களை அரசியலுக்காக எதிர்க்க வேண்டியதில்லை 

தொடர்புடைய செய்திகள்