← முகப்பு செய்திகள்

2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நி

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நி
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் நிகழ்வு

2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று (17) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்மாக உயிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் சிக்குண்டு பரிதவித்தோரின் உயிர் காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் நாளை (18) மாலை வரை திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் முற்றத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலையிலிருந்து செல்வோருக்கான விசேட பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இனம் அழிக்கப்பட்டமை மற்றும் படுகொலைகளுக்கெதிரான நீதி வேண்டி நடைபெறும் இந் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்திப்போம்.

மேலும் செய்திகள்
செய்திகள்
Suryakumar Yadav shows incredible sportsmanship by congratulating and hugging Shreyas Iyer on
07 Jun 2026
செய்திகள்
Vaibhav Sooryavanshi was allowed to accompany his parents on the Ireland and
07 Jun 2026
செய்திகள்
India vs Afghanistan Test: India targets a massive first-innings total against Afghanistan
07 Jun 2026
செய்திகள்
‘ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்’: தகிக்கும் வெயிலில் ஜவுளி தொழிலாளர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னை – பிபிசி கள ஆய்வு
23 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
2 மணி நேரம் முன்னர்
செய்திகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net