← முகப்பு செய்திகள்

2009 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்க

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
2009 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்க
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்

2009 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடிச்சந்தியில் வந்தாறுமூலை இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன் போது பொதுச்சுடர், விளக்குகள் ஏற்றப்பட்டும் அகவணக்கம் செலுத்தியும் இறுதியுத்தத்தில் உயிரிழந்தவர்கள் உணர்வுபூர்வமாக மலர்தூவி நினைவுகூரப்பட்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை கௌரவ தவிசாளர் முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், நீர்முகபிள்ளையார் ஆலய பிரதமகுரு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net