1. கனடா
தமிழின அழிப்பை அங்கீகரித்த முதல் மற்றும் ஒரே நாடு கனடா ஆகும்.
2022 மே 18 அன்று, கனடா நாடாளுமன்றத்தில் (Parliament of Canada) ஒருமனதாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின்படி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தது ஒரு “இனஅழிப்பு” என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் நாளை “தமிழின அழிப்பு நினைவு நாள்” (Tamil Genocide Remembrance Day) ஆகக் கனடா அரசு அறிவித்தது.
●தீர்மானத்தின் முக்கிய வரிகள் (நாடாளுமன்றக் குறிப்பு):
“இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை இந்த அவை அங்கீகரிக்கிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் நாளை ‘தமிழின அழிப்பு நினைவு நாள்’ (Tamil Genocide Remembrance Day) ஆக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.”
●* கனடா பிரதமரின் உத்தியோகபூர்வ அறிக்கை:
முன்னால் கனடா பிரதமர் “ஜஸ்டின் ட்ரூடோ” தனது உத்தியோகபூர்வ நினைவு நாள் அறிக்கையில்](https://www.pm.gc.ca/en/news/statements/2024/05/18/statement-prime-minister-trudeau-on-tamil-genocide-remembrance-day),
முள்ளிவாய்க்கால் படுகொலையைச் சுட்டிக்காட்டி, பன்னாட்டு அளவில் பொறுப்புக்கூறலையும் நீதியையும் நிலைநாட்டக் கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும் எனத் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார்.

2. ஒன்றாரியோ மாகாணம், கனடா (Ontario, Canada):
கனடாவின் ஒன்றாரியோ மாகாணமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு “தமிழின அழிப்பு கல்வி வாரம்” (Tamil Genocide Education Week – Bill 104) சட்டம் இயற்றப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 18 உடன் முடிவடையும் 7 நாட்களைத் ‘தமிழின அழிப்பு கல்வி வாரம்’ என இந்த மாகாணம் பிரகடனம் செய்கிறது. இக்காலகட்டத்தில், உலக வரலாற்றில் நடந்த கொடூரமான இந்த இனஅழிப்பைப் பற்றிப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி கற்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்படுகிறது.”
ஒன்றாரியோ மாகாணச் சட்டம் (Bill 104)
(Tamil Genocide Education Week Act, 2021)]
(https://www.ola.org/en/legislative-business/bills/parliament-42/session-1/bill-104) என்ற சட்டமே இயற்றப்பட்டுள்ளது. [12]
3. தமிழ்நாடு, இந்தியா Tamil Nadu, India
2013 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டசபையில் அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால், இலங்கையில் நடந்தது, ஒரு திட்டமிட்ட “இனப்படுகொலை” என்றும், இது குறித்துப் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. பார்சிலோனா மாநகரசபை ஸ்பெயின்
( Barcelona Council, Spain)
2019 சனவரி 25 அன்று, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநகர சபை “சீறீலங்கா அரசாங்கத்தால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை” குறித்துப் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது.
5. பலேர்மோ மாநகரசபை, இத்தாலி
( Palermo Council, Italy):
2021 செப்டம்பர் 24 அன்று, இத்தாலியின் பலேர்மோ மாநகர சபை தமிழின அழிப்பை அங்கீகரித்து, ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழின அழிப்பு கல்வி வாரத்தை ஊக்குவிக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
6. வடக்கு மாகாண சபை, இலங்கை
Northern Provincial Council, Sri Lanka):
2015 பிப்ரவரி 10 அன்று வடக்கு மாகாண சபையின் முன்னால் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில், இலங்கை அரசு தமிழினப் படுகொலையைச் செய்தது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி, ஐ.நா. இதற்குப் பன்னாட்டு விசாரணை நடத்தக் கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7. அமெரிக்கா (United States):
அமெரிக்க நாடாளுமன்றத்தின் (US Congress) பிரதிநிதிகள் சபையில் தமிழர்களின் சுயாட்சி உரிமையையும், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பையும் சுட்டிக்காட்டி “Wiley Nickel” போன்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்களால் தீர்மானங்கள் (H.Res. 1230) சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.
8. பிரித்தானியா -United Kingdom
பிரித்தானியா, ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தீர்மானம் (Motion S6M-19300 – 2025):
2025 அக்டோபர் 9 அன்று ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பில் கிட் (Bill Kidd) என்பவரால் அதிகாரப்பூர்வத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானம் ஐநா அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக சர்வதேச கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரியது.
9. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ( UNHRC )
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறக் கோரி தொடர்ச்சியாகப் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி, அதற்கான சாட்சியங்களைச் சேகரித்து வருகிறது.
ஐநா பொதுச்செயலாளரின் நிபுணர் குழு (UN Panel of Experts – 2011)
இறுதிப் போரின் கடைசி மாதங்களில் மட்டும் 40,000 க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
10. மன்னார் ஆயர் பேரவையின் சமர்ப்பிப்பு (Catholic Diocese of Mannar)
2008 அக்டோபர் முதல் 2009 மே வரையிலான காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் 146,679 தமிழ் மக்கள் எவ்விதத் தடயமும் இன்றி காணாமல் போயுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் தெரிவித்துள்ளது
11. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், யேர்மனி (Permanent Peoples’ Tribunal – Bremen)
சிறீீலங்கா அரசு திட்டமிட்ட முறையில் தமிழினத்தின் உள்கட்டமைப்பை அழித்து, “தொடரும் இனஅழிப்பை” (Ongoing Genocide) நிகழ்த்தி வருகிறது எனத் தீர்ப்பளித்தது.
12. வடக்கு கிழக்கு மனித உரிமைச்செயலகம்
NESHoR
1956 தொடக்கம் 2008 வரை தமிழீழத்தில் சிங்கள இனவாத அரசுகளினால் நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலைகளின் விபரங்களை கொல்லப்பட்டவர்களின் பெயர்கள், இடங்கள் போன்ற விபரங்களுடன் உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டது.
இந்த அதிகாரப்பூர்வ நாடாளுமன்றம், பன்னாட்டு சபைகள்,மன்றங்களின் அங்கீகாரங்கள், பன்னாட்டு அரங்கில் தமிழின அழிப்பிற்கான அங்கீகாரத்தையும், ஈழத்தமிழர்களின் தன்னாட்சி மற்றும் நீதிப் போராட்டத்திற்கான அடித்தளத்தையும் அனைத்துலக அரங்கில் கொண்டு சேர்த்துள்ளன.
எனவே,
* நாம் துணிந்து போராடுவோம்!
உறுதி தளராது போராடுவோம்! சத்தியமும் நியாயமும் எம்பக்கம் உள்ளது!
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்