← முகப்பு தமிழ்

ஹோர்முஸ் நீரிணை எதிரி நாடுகளைத் தவிர மற்ற அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 24 பார்வைகள்

தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்துகொண்டுள்ளார். அப்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சீன பயணத்தில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஈரானிய அமைச்சர் அராக்சி கூறியதாவது:

“ஹோர்முஸ் நீரிணை பொறுத்தவரையில் அது முழுமையாகத் திறக்கப்பட வேண்டுமெனவே நாங்களும் விரும்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது. எங்களுடன் போரிடும் நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் அதன் வழியாகச் செல்லலாம்.

அவ்வழியாகப் பயணிக்க வேண்டிய கப்பல்கள் எங்கள் இராணுவத்துடன் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில், அந்தப் பாதையில் பொறுத்தப்பட்டுள்ள கண்ணிவெடிகள் உள்ளிட்ட தடைகளைக் கடந்து செல்வதற்கு நாங்கள் அவர்களுக்கு வழிக்காட்டுவோம். இதுபோல், ஏராளமான இந்திய கப்பல்களுக்கு நாங்கள் வழிகாட்டி இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா உடனான ஈரானின் போர் தொடங்கியது முதல் ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி 3 நாள் அரசு முறைப் பயணமாக, கடந்த 13ஆம் திகதியன்று இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net