வெசாக் தன்சல்களுக்கு புதிய சுகாதார அறிவுறுத்தல்
வெசாக் தன்சல்களின் போது நீரினால் பரவக்கூடிய தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க, குளிர்ந்த பானங்களுக்குப் பதிலாக தேநீர், காப்பி போன்ற சூடான பானங்களை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் தொற்றுநோய் சூழலைக் கருத்திற்கொண்டு இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன்சல் ஏற்பாட்டாளர்களின் மேலதிக ஒருங்கிணைப்புக்காக சுகாதார அமைச்சு சில துரித பதிளலிப்பு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய கொழும்பு மாநகர சபை – 0776697674, மத்திய உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு- 0779191010 மற்றும் பொது விபரங்கள்- 0112670182 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு தேவையான அறிவுருத்தல்களை பெற்றுக்கொள்ள முடியும்.