← முகப்பு செய்திகள்

விஜய்க்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமராதுங்க வாழ்த்து

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 56 பார்வைகள்
விஜய்க்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமராதுங்க வாழ்த்து

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோசப் விஜய்க்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமராதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில்,

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க சாதனை என பாராட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்துள்ள அவர், விஜயின் தலைமையின் கீழ் அந்த உறவு மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், புதிய பொறுப்பில் வலிமை, ஞானம் மற்றும் வெற்றிகள் தொடர வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net