← முகப்பு பதிவு

யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 40 பார்வைகள்
யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார்
வலி. வடக்கில் சில காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் ?

யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான விசேட குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.

குறித்த குழுவினருடன் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இணைந்து இராணுவ கட்டுப்பாட்டில் மக்களின் காணிகளை நேரில் பார்வையிட்டனர்.

"மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய காணிகளை விடுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் , பலாலி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் , உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தனியார் காணிகளுக்குள் சென்று காணி விடுவிப்பு தொடர்பிலான சாத்தியங்கள் குறித்து நேரில் ஆராய்ந்தனர்.

அதனை தொடர்ந்து பலாலி இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் குறித்த குழுவினர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
8 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
8 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
9 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net