யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதனார்மடம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஜேசிபியும், யாழில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த காரும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், காரும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேசிபியின் சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்