முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் கோத்தபாய கைது விடயம் பரபரப்பாகியுள்ள நிலையில் அவரை காப்பாற்ற இனவாதம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையிலேயே ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில்; கைதுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக புதிய மக்கள் முன்னணி தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவுக்கு ஏற்கனவே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.