← முகப்பு பதிவு

பொலிசாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள

🕐 8 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 4 பார்வைகள்
பொலிசாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள
பொலிசாரின் அச்சுறுத்தல்களை மீறி வல்வெட்டித்துறையில் போராட்டம்

பொலிசாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய கருத்துக்களைக் கொண்ட பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சங்கீர்த்தனன் எனும் சொல்லிசை பாடகர் தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,குறித்த பாடகரை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தி வல்வெட்டித்துறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு, சங்கீர்த்தனனின் விடுதலையையும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

குறித்த போராட்டம் தொடர்பிலான அறிவித்தல்கள் வெளியான நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்ட ஏற்பாட்டளர்கள் என சிலரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் , போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் , போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் , உங்களையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தி , அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்று விடுவித்து இருந்தனர்.

இந்நிலையில் பொலிசாரின் நெருக்கடிகள் அச்சுறுத்தல்களையும் மீறி , கலைஞனை விடுவிக்க வேண்டும் என போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்
பதிவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற
2 மணி நேரம் முன்னர்
பதிவு
டிரம்பின் வேண்டுகோளை ஏற்று ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்திவிட்டது என்று ஒரு மூத்த இஸ்ரேலிய
5 மணி நேரம் முன்னர்
பதிவு
இஸ்ரேலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை நிறுத்தப்போவதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது, ஆனால் இஸ்ரேல் லெபனானைத் தாக்கி
5 மணி நேரம் முன்னர்
பதிவு
உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஈரானின் இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலை இடைமறித்ததாகவும் தாக்குதல்கள் அபாயமில்லை என அறிவி
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net