வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, இதுவரை உணவோ அல்லது நீரோ உட்கொள்ளவில்லை என்று அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
இன்று (08) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று சுரேஷ் சலேயின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியில் வந்த போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“அவர் இன்னும் உணவோ, நீரோ எதுவும் உட்கொள்ளவில்லை. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைத்தியர்கள் கண்காணித்து வருகிறார்கள், சேலைன் ஏற்றப்படுகிறது. அவர் உண்பதோ, குடிப்பதோ இல்லை; வேறு எதையும் செய்வதில்லை. அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை” என்று அவர் கூறினார்.
சுரேஷ் சலே தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
📰
தமிழ்
கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆ
📰
தமிழ்
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும்
📰
தமிழ்
2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும்
📰
தமிழ்
எத்தியோப்பியாவில் கடத்தப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்புகளுக்காக எ
📰
தமிழ்
விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம்
📰
தமிழ்
அம்பாந்தோட்டை நகரை அண்டிய பகுதிகளில் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை