கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேயை விடுவிப்பதற்கான முயற்சிகள் உச்சமடைந்துள்ளது.
அநீதியான முறையிலும், மனிதாபிமானமற்ற ரீதியிலும் சுரேஸ் சாலே நடத்தப்படுவதாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் போராட்டம் ஒன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சுரேஸ் சாலே தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, அவருக்கு நியாயமான முறையிலான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி,; கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தற்போதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு, அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே போராட்டதில் ஈடுபட்ட பெண் ஒருவர்;, புலிக்கு பாலூட்டும் அனுரகுமார என உரத்த குரலில் சத்தமிட்டார். இந்நிலையில், சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளனர்.