← முகப்பு பதிவு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் சட்டப் பிரச்சினைகளை நாடாளுமன்றமே தீர்க்க வேண்டும். தேர்தலை

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 8 பார்வைகள்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் சட்டப் பிரச்சினைகளை நாடாளுமன்றமே தீர்க்க வேண்டும். தேர்தலை
நிதி இல்லை? :வீணாக அலட்ட தேவையில்லை!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் சட்டப் பிரச்சினைகளை நாடாளுமன்றமே தீர்க்க வேண்டும். தேர்தலை நடத்தும் துல்லியமான திகதியை இப்போது கூற முடியாவிட்டாலும் விரைவில் அத்தேர்தல் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி முழுமையாக டிட்வா புயல் பாதிப்பு நிவாரணங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை. அவசரத் தேவைகளுக்காக மிகச் சிறியதொரு தொகையே அங்கிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே நிதி இல்லை என்று யாரும் வீணாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளரான டில்வின் சில்வாவின் கருத்தை அதே அரசாங்கத்தின் மறுத்துக் கூறியிருப்பது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆளுங்கட்சியின் தலைமைக்குள் முரண்பாடு தோன்றியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. அந்தத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியானது அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்காக முழுமையாக ஒதுக்கப்பட்டுவிட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ் கட்சி தலைவர்கள் தேர்தல் நடத்தப்படும் திகதியை எங்கோ இருக்கும் ஒரு கட்சியின் செயலாளர் தீர்மானிக்க முடியாது. நாட்டின் தேர்தல்கள் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதை நாடாளுமன்றம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
8 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
8 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
9 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net