← முகப்பு செய்திகள்

மரண அறிவித்தல் | திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
மரண அறிவித்தல் | திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

(சுருவில் யாழ்ப்பாணம்)

ஆறு வருடங்கள் ஆண்டவன் அளித்த வரம் என்றே எண்ணி நின்றோம்.
மனதில் ஏக்கத்தைச் சுமந்து எம் பாமாவைத் தாங்கிநின்றோம்.
அவர் அருகிருந்து ‘அம்மாவை’ வணங்கி வேண்டுதல் செய்தோம்.
பெரும் பாரத்தைச் சுமந்தவராய் எம் பாமா காலத்தை வென்று வாழ்ந்தார்.
கனிவோடு பாசத்தை பகிர்ந்தார். குழந்தைகள் விரும்பும் தாயாகத் திகழ்ந்தார்.
குடும்பத் துணைவருக்கு தோளாயும். பெற்ற இருவரை போற்றியும் வாழ்ந்தார்
‘அழைப்பு’ வந்ததும் அமைதியாய்ப் பிரிந்தார் அன்னையின் அடியை நாடி!

யாழ்ப்பாணம் சுருவில், ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்துவந்தவருமான திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன் அவர்கள் 01-05-2026 அன்று அன்னையின் திருவடியைச் சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா பரமேஸ்வரி தம்பதியின் கனிஸ்டபுத்திரியும். மகேஸ்வரி நாகலிங்கம் அவர்களின் செல்லப் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா-சந்தானலட்சமி தம்பதியின் அன்பு மருமகளும், கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும், பவித்திரன், வாசுகியின் ஆகியோரின் அன்புத் தாயாரும், நிலாஷா, ஜெனிசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், பத்மலோசனி,சத்தியலோசனி, சத்தியவேணி காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, சத்தியகுமார். சத்தியபவான் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற உமாதேவியின் மைத்துனியும், நவதாஸ் அவர்களின் சகலியும், லோகேந்திரலிங்கம், சுதந்திரகரன், காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரம், மற்றும் சாந்தினி,சுகிர்தா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் செவ்வாய்கிழமை 05-05-2026 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணிவரையும்,

மறுநாள் புதன்கிழமை காலை 9:30 தொடக்கம் 11:00 வரையும் 8911 Woodbine Ave, Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home 60

பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:

கதிர்காமநாதன் (நாதனி் – கணவன்) 416-724-5044
பவித்திரன் (மகன்) 647-980-5044

மேலும் செய்திகள்
செய்திகள்
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பி
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Gautam Gambhir confident of India Playing in WTC Final
05 Jun 2026
செய்திகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Sai Sudarshan Likely to Play at No 3 for
05 Jun 2026
செய்திகள்
புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளாக என்னென்ன வைத்துள்ளார் என்பதை
05 Jun 2026
செய்திகள்
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
05 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net