← முகப்பு செய்திகள்

மன்னாரில் மனோன்மணி அறக்கட்டளை ஏற்பாட்டில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் செயலமர்வு

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 66 பார்வைகள்
மன்னாரில் மனோன்மணி அறக்கட்டளை ஏற்பாட்டில்  உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் செயலமர்வு

(மன்னார் நிருபர்)

(07-05-2026)

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் கருப்பொருளில் மனோன் மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் மன்னாரில் கணித விஞ்ஞான பிரிவுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட இலவச செயலமர்வு 7ம் திகதி அன்று வியாழக்கிழமை (7) காலை சம்பிரதாயபூர்வமாக மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் கல்வி வலயத்தின் மேற்பார்வையின் கீழ் மனோன் மணி அறக்கட்டளையின் ஸ்தாபகர் அகஸ்ரின் சவேரியான் அவர்களின் நிதி பங்களிப்பிலும் வழி நடத்தலின் கீழ் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் மனோன்மணி அறக்கட்டளையின் பணி குழாம் , மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , ஆசிரியர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கணித விஞ்ஞான பிரிவுகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கான ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடையும் நோக்கில் இவ்வாறான செயல் அமர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் குறித்த செயலமர்வானது இடம்பெறும் . இதற்கு மேல் அதிகமாக பல பிரதேசங்களில் அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் மாலை நேர மேலதிக வகுப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
செய்திகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Sai Sudarshan Likely to Play at No 3 for
05 Jun 2026
செய்திகள்
புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளாக என்னென்ன வைத்துள்ளார் என்பதை
05 Jun 2026
செய்திகள்
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
05 Jun 2026
செய்திகள்
ENG vs NZ: Former England captain Michael Vaughan criticized the pitch at
05 Jun 2026
செய்திகள்
முதல்வர் விஜய் தலைமையில் தவெக முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. டாஸ்மாக், பட்ஜெட், மகளிர் உரிமை
05 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net