தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (07) மீண்டும் ஆளுநரை சந்தித்து தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவேண்டும். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று, ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் தவெகவிடம் கோரப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி விஜய் வியாழக்கிழமை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை.
இந்த நிலையில், ஆளுநரை புதன்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (07) கோரிக்கை விடுத்துள்ளது. பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என தெரிவித்துள்ளார்.