← முகப்பு பதிவு

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில்

🕐 13 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 8 பார்வைகள்
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில்
விபத்தில் சிக்கிய தாயும், மகளும் அடுத்தடுத்து உயிரிழப்பு

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும், மகளும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான சமுத்ரா அலுவிஹார (வயது 52) மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது மூத்த மகளான சஜீனி மகேஷிகா (வயது 32) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகள் கடந்த 2ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தொடர்ந்தும் உயிருக்காகப் போராடி வந்த தாயும் நேற்று (04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
பதிவு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதன் சார்பில் உயர்
1 மணி நேரம் முன்னர்
பதிவு
அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிணையில் வெளியே வர முற்பட்டுள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகப்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு வணிக ரீதியான வளர்ப்பாளரின் வீட்டில் நடத்தப்பட்ட
4 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர
9 மணி நேரம் முன்னர்
பதிவு
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்
13 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net