← முகப்பு பதிவு

கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர

🕐 9 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என கோரி தொண்டர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ் . போதனா வைத்தியசாலை முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தினை தொடர்ந்து, அங்கிருந்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, போராட்டத்தை நிறைவு செய்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஊதியம் கூட கிடைக்காது இந்த சேவையை மேற்கொண்டு வந்தோம்.

இது தொடர்பில் கொழும்பில் துறைசார் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போது, புதிய நியமனம் வழங்கும் போது, தற்போது தற்காலிகமாக சேவையில் இருக்கும் 120 பேருக்கும் சேவையின் அடிப்படையில் உள்வாங்குவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தனர்.

ஆனால் தற்போது வாக்குறுதி போலியாகிவிட்டது. நாளை நடைபெறவுள்ள நேர்முக தேர்வுக்கு 92 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் சேவையில் இருந்த 15 பேரே அதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மிகுதி 77 பேரும் வைத்தியசாலையில் எந்தவொரு சேவையையும் முன்னெடுக்காத அனுபவமற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதைவிட மோசடியான விடயமாக 2019 ஆம் ஆண்டின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் அதற்கு முந்தைய காலத்தில் 180 நாள்கள் சேவையில் இருந்திருந்தால் அவர்கள் உள்வாங்கப்படுவர் என்று கூறப்படுகின்றது.

ஆனால் 2000 ஆம் ஆண்டின் பின் பிறந்த அதிகமானோர் அதில் உள்வாங்கப்பட்டுள்ளது எந்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் என்று தெரியவில்லை.

இது இந்த அரசின் மோசடியாகவே இருக்கின்றது. எனவே எமக்கான நியமனம் கிடைக்கவேண்டும் அல்லது நாம் தொடர்ந்தும் போராடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்
பதிவு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதன் சார்பில் உயர்
1 மணி நேரம் முன்னர்
பதிவு
அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிணையில் வெளியே வர முற்பட்டுள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகப்
1 மணி நேரம் முன்னர்
பதிவு
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு வணிக ரீதியான வளர்ப்பாளரின் வீட்டில் நடத்தப்பட்ட
4 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்
13 மணி நேரம் முன்னர்
பதிவு
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில்
13 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net