← முகப்பு பதிவு

அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிணையில் வெளியே வர முற்பட்டுள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகப்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 4 பார்வைகள்
அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிணையில் வெளியே வர முற்பட்டுள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகப்
பிள்ளையான் வெளியே வர சாத்தியமில்லை!

அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிணையில் வெளியே வர முற்பட்டுள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொலை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பிள்ளையானால் நடத்திவரப்பட்ட முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

தனது கைது மற்றும் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிள்ளையானால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் திணைக்களம் புதிய குற்றச்சாட்டுக்களிற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளது.

பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத முகாம் ஒன்றை நடத்தி எதிர்ப்பாளர்களுக்கும் பல்வேறு நபர்களுக்கும் சித்திரவதை செய்தமை தொடர்பில் பிள்ளையானிற்கு எதிராக வலுவான விடயங்கள் விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் அந்த முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்களும் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதன் சார்பில் உயர்
1 மணி நேரம் முன்னர்
பதிவு
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு வணிக ரீதியான வளர்ப்பாளரின் வீட்டில் நடத்தப்பட்ட
3 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர
8 மணி நேரம் முன்னர்
பதிவு
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்
12 மணி நேரம் முன்னர்
பதிவு
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில்
13 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net