← முகப்பு செய்திகள்

புதுச்சேரி சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை:  போக்சோ நீதிமன்றம் அதிரடி 

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 80 பார்வைகள்
புதுச்சேரி சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை:  போக்சோ நீதிமன்றம் அதிரடி 
போக்சோ நீதிமன்றம் அதிரடி

புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மார்ச் 2ம் தேதி, விளையாடும்போது மாயமானார். இதனிடையே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதே பகுதி கழிவுநீர் வாய்க்காலில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு பையில் கட்டி, வீசப்பட்டு கிடந்தார்.முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது சோலை நகர், அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெரு முனுசாமி மகன் கருணா (எ) கருணாஸ், 18; முத்தியால்பேட்டை விவேகானந்தன், 56; என, தெரியவந்து, இருவரையும் கைது செய்தனர்.

விவேகானந்தன், அதே ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருணா மீது போக்சோ விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை நடத்த நிலையில், நீதிபதி சுமதி, கடந்த 30ம் தேதி, கருணாவை குற்றவாளி என அறிவித்து, தீர்ப்பு வழங்கினார்.இன்று காலை, புதுச்சேரி, முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதிப்பு;

வழக்கில் கைதான விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கருணாஸ் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பி
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Gautam Gambhir confident of India Playing in WTC Final
05 Jun 2026
செய்திகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Sai Sudarshan Likely to Play at No 3 for
05 Jun 2026
செய்திகள்
புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளாக என்னென்ன வைத்துள்ளார் என்பதை
05 Jun 2026
செய்திகள்
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
05 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net