← முகப்பு செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு டி. ராஜேந்தர் இரங்கல்

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு டி. ராஜேந்தர் இரங்கல்

நடிகர் ஜீவாவின், தந்தையும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.பி. சவுத்ரி ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆர்.பி.சவுத்ரி தனது சொந்த ஊருக்கு சென்றபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: “கலை உலகில் அவர் மகுடம் சூடுவதற்கு முன்னால், மரணம் வந்து அவரை சூடிக்கொண்டது ஏனோ. விபத்து என்ற பேரிலே விதி வந்து அவர் வாழ்விலே விளையாடியது ஏனோ. அவருடைய மறைவு மனதை வாட்டுகின்றது. அவரை இழந்து வாழக்கூடிய திரை உலகத்தினருக்கும், அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net