← முகப்பு செய்திகள்

பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது 61-வது வயதில் 3-வது திருமணம் தேதியையும் அறிவித்து இருப்பது

🕐 06 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது 61-வது வயதில் 3-வது திருமணம் தேதியையும் அறிவித்து இருப்பது
61-வயதில் 3-வது திருமணம்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் "மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்" என்று அழைக்கப்படுகிறார். 1965-ல் மும்பையில் பிறந்த இவர், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார். 3 இடியட்ஸ், டங்கல், பிகே, கஜினி போன்ற உலகளாவிய வசூல் சாதனைகளை படைத்த பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

நடிகர் அமீர்கான் ரீனா தத்தா என்பவரை 1986ல் திருமணம் செய்து கொண்டார். 2002ல் அவரை பிரிந்தார். அதன்பிறகு, 2005ல் கிரண் ராவ் என்பவரை அவர் திருமணம் செய்து 2021ல் அவரையும் பிரிந்தார்.இந்நிலையில் தற்போது பெங்களூரைச் சேர்ந்த 41 வயதாகும் கவுரி ஸ்ப்ராட் என்பவரை ஜூலை 5ம் தேதி மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. 61 வயதில் அமீர்கான் செய்யும் இந்த மூன்றாவது திருமணத்திற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தபோதும், அவரது நீண்ட கால ரசிகர்கள் அமீர்கானை விமர்சிக்கின்றனர்.

தனது 3-வது திருமணம் குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அமீர்கான் அளித்த பேட்டியில்:தற்போது நான் அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். எனது திருமணம் குறித்த தகவல் உண்மையானதுதான். அது ஜூலை 5ஆம் தேதி எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது. என தெரிவித்தார். புதிய காதலி கௌரி ஸ்ப்ராட்டிற்கு ஒரு மகன் உள்ளார். இவர் பெங்களூரில் வெல்னஸ், பியூட்டி ஸ்பேஸ் தொழிலில் சுயமாக ஒரு கடையை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net