← முகப்பு தமிழ்

பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்தில் இன்று (18) நடைபெற்ற ஒத்திகைப் பணிகளு

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 80 பார்வைகள்

பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள

நாளை (19) தேசிய யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி தலைமையில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தின் யுத்த வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒத்திகைப் பணிகள் இன்று நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஒத்திகைப் பணிகளும், நாளை நடைபெறவுள்ள பிரதான நிகழ்விற்கான ஏனைய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சுமார் 35 பேரடங்கிய குழுவினர், ஒத்திகைப் பணிகளுக்கும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் யுத்த வீரர்கள் நினைவிட வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தில், பொலிஸ் அதிகாரிகளினால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், அங்கு கூடியிருந்த குழுவினரை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net