← முகப்பு தமிழ்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 96 பார்வைகள்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள்

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்த வழக்கில் பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 'சதித் திட்டம்' என்ற குற்றச்சாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பு முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை அடிப்படையற்றது எனக் குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரிப்பதாகத் தெரிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான அக்குற்றச்சாட்டினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் எவ்விதத் தடையுமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவுக்கு பகிரங்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது.

அப்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றவாளி அல்ல என யோஷித ராஜபக்ஷ கூண்டிலிருந்து தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) நிராகரித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்த வழக்கில் பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 'சதித் திட்டம்' என்ற குற்றச்சாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பு முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை அடிப்படையற்றது எனக் குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரிப்பதாகத் தெரிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான அக்குற்றச்சாட்டினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் எவ்விதத் தடையுமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவுக்கு பகிரங்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது.

அப்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றவாளி அல்ல என யோஷித ராஜபக்ஷ கூண்டிலிருந்து தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதா
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net