← முகப்பு செய்திகள்

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழைமரத்தில் அசாதாரணமான வகையில்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 34 பார்வைகள்
நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழைமரத்தில் அசாதாரணமான வகையில்
கொட்டகலையில் வாழைமரத்தில் அதிசய வாழைக்குலை

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழைமரத்தில் அசாதாரணமான வகையில் நடுப்பகுதியிலிருந்து வாழைக்குலை வெளிப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வாழைமரத்தின் உச்சிப்பகுதியிலிருந்து உருவாகும் வாழைக்குலை, இம்முறை மரத்தின் நடுப்பகுதியில் தண்டுகளை துளைத்து வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிசய நிகழ்வை காண அப்பகுதி மக்கள் தொடர்ந்து வருகை தருவதுடன், இதனை இயற்கை விசித்திரம் அல்லது தெய்வீக நிகழ்வு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net