← முகப்பு செய்திகள்

நிர்வாண காணொளியை வெளியிடுவதாக மிரட்டிப் பணம் பறிப்பு: 62 வயது பெண் கைது

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 72 பார்வைகள்
நிர்வாண காணொளியை வெளியிடுவதாக மிரட்டிப் பணம் பறிப்பு: 62 வயது பெண் கைது

நபர் ஒருவரை ஏமாற்றி அவரது நிர்வாண காணொளி பதிவுகளைப் பெற்றுக்கொண்டதுடன், அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிப் பணம் பறித்த ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி கும்பலைச் சேர்ந்த 62 வயது வயோதிபப் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (05) இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர், தனது நிர்வாண காணொளிகள் இணையத்தில் வெளியாகிவிடும் என்ற அச்சத்தில், சந்தேகநபரின் வங்கி கணக்கிற்கு 1,00,000 ரூபாயை அனுப்பியுள்ளார். அதன் பின்னரே, அவர் இது குறித்துப் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 62 வயதுடைய பெண் சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net