← முகப்பு தமிழ்

(நானுஓயா செய்தியாளர்) நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபனி காணப்பட

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 60 பார்வைகள்

நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபனி காணப்பட்டது. குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வீதிகளில் பனி சூழ்ந்தது.

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் நுவரெலியா பிரதான நகரில் மிதமான மழை அவ்வப்போது பெய்ததை அவதானிக்க முடிந்தது.

இதில் நுவரெலியா நகருக்கு உள்நுழையக்கூடிய பிரதான வீதிகள் அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு அங்குள்ள வீதிகள் புகைமண்டலம் போல் காட்சியளித்தது.

இதில் நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் போன்ற வீதிகள் அதிகப்படியான பனி காணப்பட்டது.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net