← முகப்பு தமிழ்

தேசிய மாவீரர் நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற விளையாட்டு மைதான பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (19)

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 28 பார்வைகள்

ஜனாதிபதியின் தலைமையில், தேசிய மாவீரர் நினைவு தின உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (19) பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக, இன்று பிற்பகல் 03.30 மணிமுதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியும்ஹேம் சந்தியிலும் கட்டுப்படுத்தப்படவுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பாராளுமன்ற வீதி வழியாக கொழும்பிலிருந்து வெளியேற முற்படும் வாகனங்கள், பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்ல, பாலந்தூன மற்றும் கியும்ஹேம் சந்தி ஊடாக பயணிக்க முடியும்.

கியும்ஹேம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள், பாலந்தூன மற்றும் பத்தரமுல்ல ஊடாக பயணிக்க முடியும்.

போதிராஜ மாவத்தை வழியாக வரும் வாகனங்கள், பத்தரமுல்ல வீதியை அடைந்து தமக்குத் தேவையான மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்.

இந்த நிகழ்வுக்கு வருகை தரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்துவதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஜப்பான் நட்புணர்வு வீதிச் சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை, ஜப்பான் நட்புணர்வு வீதி மின்சார சபை நிலையத்திற்கு அருகிலிருந்து பெலவத்த சந்தி வரை.

எனவே, குறிப்பிட்ட காலப்பகுதியில் இப்பாதைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net