← முகப்பு பதிவு

தெற்கு ஈரானில், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் படகுகள் உள்ளிட்டவற்றின் மீது தற்காப்புத் த

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
தெற்கு ஈரானில், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் படகுகள் உள்ளிட்டவற்றின் மீது தற்காப்புத் த
ஈரான் மீது அமெரிக்கா தற்காப்புத் தாக்குதலை நடத்தியது: ஈரானும் பதிலுக்குத் தாக்கியது!

தெற்கு ஈரானில், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் படகுகள் உள்ளிட்டவற்றின் மீது தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து நமது படைகளைப் பாதுகாப்பதற்காக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்நிறுத்தத்தின் போது இராணுவம் நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறது என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.

இதேநேரம் தற்பாதுகாப்புக்காக ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஈரானின் வான் எதிர்ப்பு சாதனங்களும் வேலை செய்தன.

தங்கள் வான்வெளிக்குள் நுழைந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானம் மற்றும் ஒரு போர் விமானத்தை இடைமறித்ததாக ஈரானின் புரட்சிகரக் காவலர்கள் (IRGC) கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய வான்வெளிக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை வான் பாதுகாப்புப் பிரிவுகள் சுட்டு வீழ்த்தியதாகவும், F-35 போர் விமானம் ஈரானிய வான்வெளியிலிருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
8 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
8 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
9 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net