← முகப்பு செய்திகள்

துன்ஹேன பகுதியில் இன்று (17) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 10 பார்வைகள்
துன்ஹேன பகுதியில் இன்று (17) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து ; 08 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் காயம்

துன்ஹேன பகுதியில் இன்று (17) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி. கே. ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், 8 வயது டைய சிறுவன் ஒருவரும் காயமடைந்த நிலையில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனமும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கெப் வாகனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பிட்டிகல பகுதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டியுடன், பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்
செய்திகள்
Suryakumar Yadav shows incredible sportsmanship by congratulating and hugging Shreyas Iyer on
07 Jun 2026
செய்திகள்
Vaibhav Sooryavanshi was allowed to accompany his parents on the Ireland and
07 Jun 2026
செய்திகள்
India vs Afghanistan Test: India targets a massive first-innings total against Afghanistan
07 Jun 2026
செய்திகள்
‘ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்’: தகிக்கும் வெயிலில் ஜவுளி தொழிலாளர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னை – பிபிசி கள ஆய்வு
23 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
2 மணி நேரம் முன்னர்
செய்திகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net