முக்கியத் தொகுதிகளின் நிலவரம்
காட்பாடி தொகுதியில் மூத்த அமைச்சர் துரைமுருகன், திருவண்ணாமலையில் ஏ.வ. வேலு ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். தலைநகர் சென்னையில் அமைச்சர்கள் சேகர் பாபு (துறைமுகம்) மற்றும் மா. சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) ஆகியோரும் பின்தங்கியுள்ளனர். அதேபோல், தென் மாவட்டங்களில் அமைச்சர்கள் கீதா ஜீவன் (தூத்துக்குடி) மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி) ஆகியோரும் பின்னடைவில் உள்ளனர்.
திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோவி. செழியனும் பின்னடைவைச் சந்தித்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மன்னார்குடியில் டிஆர்பி ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் காமராஜ் முன்னிலை பெற்று வருகிறார். மன்னார்குடி தொகுதியில் டிஆர்பி ராஜா தொடர் வெற்றி பெற்ற தொகுதியாகும்.
அரசியல் மாற்றம்
சென்னை உள்ளிட்ட முக்கிய மண்டலங்களில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வரும் சூழலில், திமுகவின் இந்தத் தொடர் பின்னடைவு ஒரு பெரிய அரசியல் மாற்றத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது. இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி, பெரும்பாலான அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வெற்றியைத் தக்கவைக்கக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.