← முகப்பு செய்திகள்

தமிழ் நாட்டில் 717 மதுபானசாலைகளை உடனடியாக மூடுவதற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12)

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
தமிழ் நாட்டில் 717 மதுபானசாலைகளை உடனடியாக மூடுவதற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12)
தமிழ்நாட்டில் 717 மதுபானசாலைகளை மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு

தமிழ் நாட்டில் 717 மதுபானசாலைகளை உடனடியாக மூடுவதற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 10-ஆம் திகதி தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்தப் பாரிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மற்றும் உணர்வுபூர்வமான பகுதிகளுக்கு அருகில் உள்ள மதுபானசாலைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் 276 மதுபானசாலைகள் , கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 186 மதுபானசாலைகள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு அருகில் 255 மதுபானசாலைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் எனப் பெண்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தன. குறிப்பாக, பாடசாலைகள் மற்றும் கோயில்களுக்கு அருகாமையில் மதுபானசாலைகள் இருப்பது பெரும் சமூகச் சிக்கலாகக் கருதப்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக இந்த 717 கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மாநிலம் முழுவதும் 4,765 சில்லறை மதுபானசாலைகளை இயக்கி வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net