← முகப்பு பதிவு

தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 66 பார்வைகள்
தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர
ஆதவ் அர்ஜுனா – அருச்சுனா சென்னையில் சந்திப்பு

தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

தமிழக அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தாயகம் மற்றும் தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வு, இருநாட்டு மீனவர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் அவர்களது பாதுகாப்பு குறித்த விவகாரங்கள், இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சமூக ரீதியான கூட்டு வளர்ச்சி போன்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வருங்காலம் என்ற புள்ளியில் ஆரோக்கியமான உறவில் பயணிப்போம் என்று ஒருவருக்கொருவர் தெரிவித்து மகிழ்ந்தோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
8 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
8 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
9 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net