← முகப்பு தமிழ்

டாக்காவில் நடைபெற்ற வாரியத் தேர்தலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) புதிய தலைவராக முன்னாள

🕐 08 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

டாக்காவில் நடைபெற்ற வாரியத் தேர்தலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) புதிய தலைவராக முன்னாள் பங்களாதேஷ் கேப்டன் தமீம் இக்பால் நான்கு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் பி.சி.பி-யின் (BCB) தற்காலிகக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வந்த தமீம், புதிதாக அமைக்கப்பட்ட இயக்குநர் குழுவில் ஒரு இடத்தைப் பெற்ற பிறகு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பின் நடைபெற்ற குழுமத்தின் முதல் கூட்டத்தில் அவர் தலைவராக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டார்.

இந்தத் தேர்தல், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பங்காளதேஸ் கிரிக்கெட்டை வழிநடத்தும் 25 உறுப்பினர்களைக் கொண்ட குழுமத்தின் உருவாக்கத்தை நிறைவு செய்துள்ளது. இந்தப் பதவிக்கான வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்ற பஹிம் சின்ஹா ​​துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது தேர்தலுக்குப் பிறகு பேசிய தமீம், பங்களாதேஷ் கிரிக்கெட்டின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தவும், நிர்வாக அமைப்பிற்குள் கூடுதல் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் உறுதியளித்தார். மேலும், சமீபத்திய சர்ச்சைகளைக் கடந்து, குழுக்கள் விளையாட்டின் எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

37 வயதான அவர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) நாட்டின் அதிக ஓட்டங்களைக் (Runs) குவித்த வீரராக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதும்,பங்களாதேஷின் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
டெங்கு ஒழிப்பிற்காக 3 நாட்களைக் கொண்ட விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பி
08 Jun 2026
📰
தமிழ்
இஸ்ரேலின் வடக்கு பகுதியை இலக்கு வைத்து ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மற்றும்
08 Jun 2026
📰
தமிழ்
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதிப் பற்றிய குழு இன்று (08)
08 Jun 2026
📰
தமிழ்
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது
08 Jun 2026
📰
தமிழ்
கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 6,00,000 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளை வைத்திருந்த ஒரு
08 Jun 2026
📰
தமிழ்
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த
08 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net