← முகப்பு செய்திகள்

– ஜூலை 3 இல் இறுதித் தீர்ப்பு என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு பணமோசடி தடுப்புச்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 6 பார்வைகள்
– ஜூலை 3 இல் இறுதித் தீர்ப்பு என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு பணமோசடி தடுப்புச்
பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கில் ‘ஊழல் ஜனாதிபதி’ மகிந்தாவின் புதல்வன் யோஷிதவின் மனு மீதான விசாரணைகள் நிறைவு!

– ஜூலை 3 இல் இறுதித் தீர்ப்பு என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணைகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் 15ம் திகதி அ ன்றுடன் நிறைவு செய்துள்ளது.

அத்துடன், இந்த மனு தொடர்பான இறுதித் தீர்ப்பு அல்லது உத்தரவு எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என்றும் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட இருவர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் தீர்ப்புக்கான திகதி குறிக்கப்பட்டது.

மனுதாரரான யோஷித ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரபல சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் தனது வாதங்களை முன்வைக்கையில், “சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், எனது கட்சிக்காரருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள சதித்திட்டக் குற்றச்சாட்டை தற்போதைய சட்ட விதிகளின் கீழ் எவ்விதத்திலும் தொடர முடியாது” என்று சுட்டிக்காட்டி, அதனை நிராகரிக்குமாறு கோரினார்.

மறுபுறம், இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, அரச தரப்பு நியாயங்களையும் குற்றச்சாட்டுகளுக்கான சட்டபூர்வ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இரு தரப்பினரினதும் விரிவான சமர்ப்பிப்புகளைப் பதிவு செய்துகொண்ட நீதியரசர்கள் குழாம், வழக்கின் விசாரணைகளை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்வதாக அறிவித்ததுடன், ஜூலை 3 அன்று இதற்கான கட்டளை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net